பொது செய்தி

தமிழ்நாடு

உடல்நலம் பாதித்த யானைக்கு மீண்டும் மருத்துவ சிகிச்சை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 உடல்நலம் பாதித்த யானைக்கு மீண்டும் மருத்துவ சிகிச்சை

மேட்டுப்பாளையம்:உடல் நலம் பாதித்து, படுத்த நிலையில் உள்ள யானைக்கு, சிறுமுகை வனத்துறையினர், இரண்டாவது நாளாக, மருத்துவ சிகிச்சை அளித்தனர்.சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதி, கருப்பராயன் கோவில் அருகே, எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் யானை, சேற்றில் சிக்கி கீழே விழுந்து கிடந்தது. இதை பார்த்த சிறுமுகை வனத்துறை ஊழியர்கள், வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.வனத்துறை கால்நடை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதன் பின்பு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று காலை மீண்டும் இந்த யானை, படுத்த நிலையில் இருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.தர்பூசணி, வாழைத்தண்டு, வாழைப்பழம் போன்ற உணவுகளை யானைக்கு வழங்கினர். வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார் தலைமையில், மருத்துவ குழுவினர், யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இரண்டாவது நாள் சிகிச்சையில், 21 பாட்டில் குளூக்கோஸ், ஆன்டிபயாடிக்ஸ், வைட்டமின் தாது சத்து மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டன.இந்நிலையில் இரவு ஆனதாலும், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும், இன்று காலை மூன்றாவது நாளாக, தொடர்ந்து சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் முடிவு செய்து திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X