பொது செய்தி

தமிழ்நாடு

20 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் : கூட்டு பண்ணை திட்டத்தில் இலக்கு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஊட்டி;கூட்டு பண்ணை திட்டத்தில், 20 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை துறை அறிக்கை:நீலகிரியில், தோட்டக்கலை துறை வாயிலாக, பல்வேறு வகையான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு பின், அவர்களை இணைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தி, அவற்றின் வாயிலாக விவசாயிகளுக்கு தேவையான தோட்டக்கலை வேளாண் தொழில்நுட்பங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.கூட்டு பண்ணைய முறையில் சாகுபடி செய்ய, பயிர் தேர்வு; அதற்கான இடுபொருட்களை ஒருங்கிணைத்து வாங்குதல்; உடனடி புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்தல்; பொருட்களை ஒருங்கிணைத்து சேகரித்து அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் வாயிலாக, விவசாயிகளின் சாகுபடி செலவு குறைந்து வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2020--21ம் ஆண்டுக்கான கூட்டு பண்ணைய திட்டத்தில், 20 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உழவர் ஆர்வலர் குழு, முறையாக வங்கி கணக்கு துவக்கி, ஒவ்வொரு உறுப்பினர்களும் பங்கு தொகையாக 1,000 ரூபாய், உறுப்பினர் சந்தா தொகை செலுத்த வேண்டும். அவ்வாறு, உருவாக்கப்படும் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும், அரசின் காய்கறி சாகுபடி செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும், ஊட்டி- 8489604087, குன்னுார் 6381963018, கோத்தகிரி- 9486412544, கூடலுார் 8903447744 ஆகிய எண்களில், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X