பொது செய்தி

தமிழ்நாடு

400 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்: கோவை கொடிசியாவில் ஏற்பாடு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 400 படுக்கை வசதிகளுடன்  கொரோனா சிகிச்சை மையம்: கோவை கொடிசியாவில் ஏற்பாடு

கோவை:கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொடிசியா வளாகத்தில் 400 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி, 286 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ, படுக்கை வசதிகள் மேம்படுத்தவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து செயல்பட்டு வருகின்றன.கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''கோவை கொடிசியா வளாகத்தில் முதல்கட்டமாக, ஒரு அரங்கில், 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இங்கு, கொரோனா அறிகுறியுடன், பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருப்பவர்கள், கண்காணிக்கப்படுவர். தனி மருத்துவக்குழுவினர், பணியில் அமர்த்தப்படுவர். அறிகுறியுடன் பாதிப்புள்ளவர்களுக்கு மட்டும் இனிவரும் நாட்களில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். இ.எஸ்.ஐ., - கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சுகாதார மையங்கள், மாநகராட்சி கட்டடங்கள், தனியார் மையங்கள், கல்விநிறுவனங்கள் என, 17 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X