பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்தால் கட்டணம் :இன்று முதல் மீண்டும் அமல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
கோவை:கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களின் நலனுக்காக அனைத்து ஏ.டி.எம்.,களில், எவ்வித கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.கடந்த மூன்று மாதங்களாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களிலும், மக்கள் கட்டணம் இல்லாமல் பணம் எடுத்து வந்தனர். இச்சூழலில் இன்று முதல் (ஜூலை 1) மீண்டும் பழைய முறைப்படி

கோவை:கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களின் நலனுக்காக அனைத்து ஏ.டி.எம்.,களில், எவ்வித கட்டணமும் இல்லாமல் பணம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.கடந்த மூன்று மாதங்களாக அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களிலும், மக்கள் கட்டணம் இல்லாமல் பணம் எடுத்து வந்தனர். இச்சூழலில் இன்று முதல் (ஜூலை 1) மீண்டும் பழைய முறைப்படி ஏ.டி.எம்.,களில் குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.எஸ்.பி.ஐ., வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான, sbi.co.inயில் உள்ள தகவல்படி, மெட்ரோ நகரங்களில், எஸ்.பி.ஐ., தனது வழக்கமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்தில், எட்டு இலவச பரிவர்த்தனைகளை செய்ய அனுமதி அளித்துள்ளது.அதன்பின், கூடுதலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, ஐந்து பரிவர்த்தனைகள் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களிலும், மூன்று பரிவர்த்தனைகள் இதர வங்கிகளிலும் இலவசமாக மேற்கொள்ளலாம். இதன்பின் எடுக்கும் பணத்துக்கு ஒரு முறைக்கு, 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தகட்டண முறைகள் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X