சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மீது மோதி நிற்க லாரியை துரத்தி சென்ற போலீஸ் பலி: 'போதை' லாரி டிரைவர் கைது

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 கார் மீது மோதி நிற்க லாரியை துரத்தி சென்ற போலீஸ் பலி: 'போதை' லாரி டிரைவர் கைது

திருப்பூர்:கார் மீது மோதி, நிற்காமல் சென்ற கன்டெய்னர் லாரியை துரத்தி சென்றதில், ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குடிமங்கலத்தை சேர்ந்தவர் பிரபு, 25. ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார். இவர் காங்கயம் அருகே திட்டுப்பாறை போலீஸ், 'செக்போஸ்ட்'டில், நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, சென்னிமலையில் கார் மீது, கன்டெய்னர் லாரி (பதிவு எண்: கேஏ.01.ஏஎச்.8849) மோதி விட்டு, போலீஸ் 'செக்போஸ்ட்'டில் நிற்காமல் காங்கயம் நோக்கி செல்வதாக, காங்கயம் போலீசாருக்கு, இரவு, 11:30 மணியவில், தகவல் கிடைத்தது.அடுத்த சில நிமிடங்களில், திட்டுப்பாறை வழியே வந்த லாரியை, பிரபு நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், நிற்காமல் சென்றதால், 'வாக்கி டாக்கி'யில் தகவல் அளித்து விட்டு, டூவீலரில் துரத்தி சென்றார். அவங்காளிபாளையம் பிரிவு அருகே கன்டெய்னர் லாரி, பிரபுவின் டூவீலர் மீது மோதிவிட்டு சென்றது. இதில், அவர் அதே இடத்தில் இறந்தார்.தகவலறிந்த காங்கயம் போலீசார், கன்டெய்னர் லாரியை, நிறுத்தி, டிரைவரிடம் விசாரித்து, அவரை கைது செய்தனர். அதில், அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த பாஸ்கரன், 40 என்பதும், மதுபோதையில் இருந்ததும் தெரிந்தது.மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, டி.ஐ.ஜி., கார்த்திகேயன் மற்றும் எஸ்.பி., திஷா மிட்டல் ஆகியோர், காங்கயம் அரசு மருத்துவமனையில், பிரபு உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.துடிப்பான போலீஸ்காரர்விபத்தில் பலியான பிரபு குறித்து, சக போலீசார் கூறியதாவது: குடிமங்கலம், பெரியபட்டி, கல்லபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு, 25, பி.எஸ்.சி., பட்டதாரி. தந்தை திருமலைசாமி, விவசாயி. தாய் நீலாவதி, தம்பி திருநாவுக்கரசு என அவரது குடும்பம். பிரபுவுக்கு போலீஸ் பணியில் உள்ள ஆர்வம் காரணமாக, 2018ம் ஆண்டு சேர்ந்தார்.பணி நேரத்தில் துடிப்புடன், சுறுசுறுப்பாக இருப்பார். சக போலீஸ்காரர் மற்றும் மக்களிடம் எளிமையாக பழக கூடியவர். அவரது மறைவு மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது.இவ்வாறு, கண்ணீர் மல்க அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X