திருப்பூரில் 3 குழந்தை உட்பட 20 பேருக்கு கொரோனா | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 3 குழந்தை உட்பட 20 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 01, 2020
Share

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, 160 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில், மூன்று குழந்தைகள் உட்பட, 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. உடுமலையில் இரண்டு, திருப்பூர், காந்திநகரில், 31 வயது பெண்; வேலம்பாளையத்தில், 21 வயது பெண் மற்றும் 28 வயது ஆண்; வீரபாண்டி, திருவள்ளுவர் நகரில், 33 வயது ஆண்; பாரதி நகரை சேர்ந்த, 26 வயது ஆண் உட்பட, மொத்தம் 20 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''இரண்டு மற்றும் மூன்று வயது சிறுவர்கள், ஏழு வயது சிறுமி உட்பட, 20 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில், நான்கு பேர், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். மற்றவர்கள், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏற்கனவே, கொரோனா பாதித்த நபரின் குடும்பத்தை சேர்ந்த, மேலும் ஐந்து பேருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X