போலி இ-பாஸ் : எல்லையில் நுழைய முயன்ற 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி 'இ-பாஸ்' : எல்லையில் நுழைய முயன்ற 5 பேர் கைது

Added : ஜூலை 01, 2020
Share

ஊட்டி:போலி 'இ--பாஸ்' பயன்படுத்தி, எல்லையில் நுழைய முயன்ற, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து முறையாக, இ--பாஸ் மூலம் வருபவர்களை மட்டும், எல்லையில், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திய பின் அனுமதிக்கின்றனர்.அதன்படி, நேபாளம், பெங்களூரை சேர்ந்த ஐந்து பேர் வாகனத்தில், கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக நுழைய முயன்றனர். அவர்கள் வைத்திருந்த இ--பாஸ் சோதனைக்கு உட்படுத்திய போது, போலி என, தெரிய வந்தது. இது குறித்து ஊட்டி ஜி1 போலீசார் வழக்கு பதிந்து, ராம்பிரசாத், 37, ரமேஷ் சர்மா, 42, ஈஸ்வர் சர்மா, 50, சந்தோஷ் சர்மா, 19, மனிஷா சர்மா, 25 ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X