சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 10 விமான சேவை ரத்து

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : சென்னையில் இருந்து கோல்கட்டா, கொச்சி, ராஜமுந்திரி,கடப்பா, கவுகாத்தி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மைசூரு, ஐதராபாத், அந்தமான் ஆகிய 10 நகரங்களுக்கு நேற்று இயக்கப்பட வேண்டிய விமானங்கள் போதிய பயணியர் இல்லாததால் ரத்து செய்யப்பட்டன.அதேநேரத்தில் திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை, துாத்துக்குடி, சேலம், புவனேஸ்வர், பெங்களூரு உள்ளிட்ட 26 நகரங்களுக்கு குறைந்த

சென்னை : சென்னையில் இருந்து கோல்கட்டா, கொச்சி, ராஜமுந்திரி,கடப்பா, கவுகாத்தி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மைசூரு, ஐதராபாத், அந்தமான் ஆகிய 10 நகரங்களுக்கு நேற்று இயக்கப்பட வேண்டிய விமானங்கள் போதிய பயணியர் இல்லாததால் ரத்து செய்யப்பட்டன.latest tamil newsஅதேநேரத்தில் திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை, துாத்துக்குடி, சேலம், புவனேஸ்வர், பெங்களூரு உள்ளிட்ட 26 நகரங்களுக்கு குறைந்த அளவிலான பயணியருடன் விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து 26 விமானங்கள் சென்னைக்கு வந்தன.


latest tamil newsஇந்தியர்கள் வருகை :
பிரிட்டன், ஓமன், வியட்நாம் நாடுகளில் சிக்கித் தவித்த 446 இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று சிறப்பு விமானங்களில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.


latest tamil newsஇவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு தனிமைப்படுத்துதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Murugan - Nagercoil,இந்தியா
01-ஜூலை-202012:28:20 IST Report Abuse
N.Murugan குமரி மாவட்ட மக்கள் சென்னை வந்தால் குமரி செல்ல ஆகும் செலவு அரசு ஏற்குமா, திருவனந்தபுரம் போனால் சுலபமாக குமரி போய் விடலாம்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜூலை-202010:08:57 IST Report Abuse
மலரின் மகள் நமது விமானங்கள் குறிப்பாக ஏர் இந்தியா மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தாள் தான் அரசு வேகமாக செயல்படும். அவர்கள் வரக்கூடாது இவர்கள் திரும்ப கூடாது என்று நாட்டை நஷ்டத்தில் இட்டு சென்றவர்கள் திருந்த வாய்ப்பு இருக்கும். நமது பொருளாதாரத்திற்கு பிடித்து கொண்ட அஷ்டமத்து சரியாகவும், நித்த நித்த சந்திராஷ்டமாகவும் வந்தது முதியவரின் செயலால் என்று சொல்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் விமான போக்குவரத்தை சீரும் சிறப்புமாக லாபகரமாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் இயக்குவதற்கு வகை செய்யவேண்டும். ஒரு மிசன் என்பது அதை நோக்கி சிறப்பாக செயல்படவேண்டும். அதில் அரசியல் ஏமாற்று வித்தைகள் நடக்க அனுமதிக்க கூடாது. எதற்காக அது துவங்கப்பட்டது, வெளிநாட்டவர்களை தாயகம் அழைத்து வர, அதற்குன்டானா வேகத்தை எடுக்கவேண்டும். பல நூறு விமானங்களை உலகம் முழுவதும் இயக்கி தாயகம் திரும்புவோரை பாதுகாப்பாக பல்வேறு ஓட்டல்களில் அதற்கான நல்ல திட்டங்களை செய்து தங்கவைத்து சிறப்பாக செய்யலாம். மனமில்லாமல் இருப்போரை திருத்த முடியாது. தெரிந்தோ தெரியமலையோ மக்களுக்கு மனம் உடல் ஆவி என்று கஷ்டம் இழைப்போர் இறைவனின் தீர்ப்பில் வருத்தம் அடைந்தே தீருவார்கள். பிறர்கின்னா முற்பகல் செய்தோருக்கு என்ன நடக்கும் என்று சொல்லித்தெரியவேண்டாம். பிற்பகல் நிச்சயம் உண்டு. வந்தே மாதரம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜூலை-202009:56:17 IST Report Abuse
மலரின் மகள் முதலில் ஒன்றை அரசு உறுதி படுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு நோய் தோற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அரசு தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அங்கிருக்கும் போது நோய் தோற்று வந்தால் அரசு பொறுப்பேற்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X