மும்பையில் இருந்து வந்த2 சிறுமிகளுக்கு கொரோனா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மும்பையில் இருந்து வந்த2 சிறுமிகளுக்கு கொரோனா

Added : ஜூலை 01, 2020
Share

செஞ்சி : மும்பையில் இருந்து வந்த 10 மற்றும் 6 வயது சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருவதிகுன்னம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மும்பையில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். தொடர் ஊரடங்கு காரணமாக இவர் கடந்த 28 ம்தேதி மனைவி, மகள்கள் என ஐந்து பேர் சொந்த காரில்திருவதிகுன்னத்திற்கு வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செஞ்சிக்கு வந்த போது மேல்பாப்பாம் பாடியில் உள்ள விழுப்புரம் மாவட்ட சோதனை சாவடியில்போலீசார்தடுத்து நிறுத்தி நாட்டார் மங்கலத்தில் உள்ள தனிமை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இவர்களில் 10மற்றும் 6 வயது குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக சுகாதாரத்துறையினர் அழைத்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X