பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கரை தாலுகா அலுவலகத்துக்கு 'சீல்'

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மதுக்கரை:கோவை, மதுக்கரை தாலுகா அலுவலகம், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் செயல்படுகிறது. இங்கு சர்வேயராக இருக்கும் 37 வயது ஆண், கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் அவதிப்பட்டார். 32 வயதுடைய அவரது மனைவிக்கும் அதே பாதிப்பு காணப்பட்டது. பரிசோதனையில், இருவருக்கும் தொற்று உறுதியானது. நேற்று காலை, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.மதுக்கரை தாலுகா அலுவலகம் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. தாசில்தார் உட்பட, 34 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வங்கியில் பணிபுரியும், 50 வயது பெண்ணுக்கு தொற்று, உறுதியானது. மதுக்கரை மார்க்கெட் ரோடு, பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது குடும்பத்தார், எட்டு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X