கோவை;''கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த இக்கட்டான சூழலில் மருத்துவர்கள் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவையை ஒட்டுமொத்த தேசமே பாராட்டுகிறது,'' என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.தேசிய மருத்துவர்கள் தினம், இன்று ஜூலை 1ல் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:வைரஸ் பாதிப்பு மிகுந்த இந்த இக்கட்டான சூழலில், லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, இறப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலையற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் உயிருடன் இருப்பதும், இறப்பதும் மருத்துவர் கையில் தான் உள்ளது. தங்கள் தனிப்பட்ட நலனை விட, மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.அதற்காக, தங்கள் தனிப்பட்ட சுகங்களையும், வசதிகளையும் தியாகம் செய்கின்றனர். மருத்துவர்களின் இந்த தன்னலமற்ற குணம், மிகுந்த போற்றுதலுக்குரியது. அவர்களது சேவையை தேசமே பாராட்டுகிறது.இவ்வாறு, சத்குரு தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE