தமிழ்நாடு

ரூ.1.36 லட்சம்! பத்து நாளில் கொரோனா அபராதம்...கடலூர் நகராட்சி நிர்வாகம் அதிரடி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 ரூ.1.36 லட்சம்! பத்து நாளில் கொரோனா அபராதம்...கடலூர் நகராட்சி நிர்வாகம் அதிரடி

கடலுார் மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கொரோனா பரவாமல் தடுக்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தொற்ற தடுக்க தெருக்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 15ம் தேதி முதல், தற்காலிக சோதனைச் சாவடிகள், நிரந்தர சோதனை சாவடிகளில் அந்தந்த உட்கோட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, முகக் கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் மீதுவழக்குப் பதிந்தும், அபராதமும் வசூலித்து வருகின்றனர். கடலுார் நகராட்சி நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 45 வார்டுகளிலும் தற்காலிக பணியாளர்களை நியமித்து காய்ச்சல், சளி, இருமல், உடல் அசதி போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறியுடன் நபர்கள் உள்ளார்களா, வெளியூர்களில் இருந்து யாராவது கடலுாரில் தங்கியுள்ளார்களா என்ற விவரங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

கடலுார் உழவர் சந்தை, செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு, டவுன்ஹால் ரவுண்டானா, மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், வண்ணாரப்பாளையம் நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலைய நுழைவு வாயில், முதுநகர் பஸ் நிறுத்தம் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் நகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் ஓட்டுனர்களிடம் தலா 100 ரூபாய் அபராதம் வசூலிக்கின்றனர். கடந்த 16ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 1,364 பேரிடம் தலா 100 வீதம் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 36 ஆயிரம் 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X