தரைக் கிணறுக்கு தடுப்பு அமைப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரைக் கிணறுக்கு தடுப்பு அமைப்பு

Added : ஜூலை 01, 2020
Share

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே சாலையோரம் இருந்த தரைக்கிணற்றில் அதிகாரிகள் நடவடிக்கையால் இரும்புத் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் எல்லைப்பகுதியில் நடனசுந்தர வினாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் எதிரே சாலையோரம் உள்ள பழமையான தரைக்கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வீணான கழிவுப்பொருட்களை கொட்டி வந்தனர்.போக்குவரத்து நிறைந்த சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றை துார்வாரி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அல்லது கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தி, தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து கண்டங்கலம் பி.டி.ஓ., உத்தரவின்பேரில் ஆழியூர் ஊராட்சியின் மூலம் தரைக்கிணறு முழுமையாக இரும்பு தடுப்பு மூலம் மூடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X