கோவையில் கொரோனா பரவலும், மக்கள் குழப்பமும்! சுகாதாரத் துறையினர் கூறுவது என்ன?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா பரவலும், மக்கள் குழப்பமும்! சுகாதாரத் துறையினர் கூறுவது என்ன?

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
கோவை:கோவையில் கொரோனா குறித்து, மாநில மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்படும் தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லை என, குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், மக்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், கொரோனா அதிகளவு பரவி கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காமல் சென்று

கோவை:கோவையில் கொரோனா குறித்து, மாநில மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்படும் தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லை என, குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், மக்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், கொரோனா அதிகளவு பரவி கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் இந்த கொரோனா பரவலால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தொற்று கண்டறியப்பட்ட பீளமேடு, சின்னியம்பாளையம், ஒண்டிப்புதுார், சரவணம்பட்டி, ரத்தினபுரி, ராமநாதபுரம், குனியமுத்துார், போத்தனுார், டவுன்ஹால், தெலுங்குபாளையம், கோட்டூர், கே.கே.புதுார் என பல்வேறு பகுதிகளை சுகாதாரத் துறையினர் முடக்கியுள்ளனர்.பரவல் காரணம் என்ன?கோவையில் முதல் கட்டமாக, 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில், 145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்; ஒருவர் இறந்தார். அதன் பிறகு, 25 நாட்களுக்கும் மேல் கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த கோவையில், மீண்டும் தொற்று அதிகளவில் ஏற்பட, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் ஓர் காரணம். எனினும் தனி மனித இடைவெளி, முக கவசம், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்புகளை கடைபிடிக்காதவர்களால் தான் நோய் பரவல் அதிகரித்தது.கேரளாவை சேர்ந்த ஒருவர், கவுண்டம்பாளையம், சின்னியம்பாளையம், வேலாண்டிபாளையம் மற்றும் பேரூர் என, கோவையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து. ஆனால், கொரோனா பட்டியலில் இதுவரை இருவர் மட்டுமே இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது.அதேபோல், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கோவையை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அபாய கட்டத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை எத்தனை; குணமடைவோர், 14 நாட்களுக்கு பின்னர்தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனரா; டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் இன்னும் எத்தனை பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்; கொரோனா விதிகளை மீறிய எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, போன்ற தகவல்கள் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையிடம் இருந்து, வெளியிடப்படுவதில்லை. 'சரியாக சொல்ல முடியாது'கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ''கொரோனா பட்டியல் குழப்பம் குறித்து சுகாதார துறையிடம்தான் கேட்க வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்தோரும், இங்கு சிகிச்சை பெறுவதால், கோவை மாவட்டத்தில் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக சொல்ல முடியாது. இதுவரை, இங்கு அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, 482. தற்சமயம், 275 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அபாய கட்டத்திலும் சிலர் இருக்கின்றனர்; அவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.'குளறுபடி எதுவும் இல்லை'கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில்,''கொரோனா பாதிப்பு பட்டியலில் குளறுபடி எதுவும் இல்லை. இரவு 12 மணி முதல் அடுத்த நாள் மதியம் 12 மணி வரை கிடைக்கும் பரிசோதனை முடிவுகள் மட்டுமே, தமிழக சுகாதார துறை வெளியிடுகிறது. ஆனால், மாவட்ட சுகாதாரத் துறை மதியம் மட்டுமல்லாது மாலை வரை, எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை, முன்கூட்டியே ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகிறது. கோவை மாவட்டத்தில், 264 பேர் சிகிச்சை பெறுகின்றனர்; 260 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வேலாண்டிபாளையம், பேரூரை சேர்ந்தோர் சந்தேக மரணம், என்பதால் இருவர் மட்டுமே இறப்பு கணக்கில் காட்டப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X