புவனகிரி தாலுகா அலுவலகத்திற்கு மதில் சுவர் அமைக்கப்படுமா? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரி தாலுகா அலுவலகத்திற்கு மதில் சுவர் அமைக்கப்படுமா?

Added : ஜூலை 01, 2020
Share
புவனகிரி : புவனகிரி தாலுகா அலுவலகத்திற்கு மதில் சுவர் அமைக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புவனகிரி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அலுவலகம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் வாடகை இடத்தில் இயங்கியது.பின்னர், பெருமாத்துாரில் தாலுகா அலுவலகம், அதன் அருகில் தாசில்தார் குடியிருப்பும்

புவனகிரி : புவனகிரி தாலுகா அலுவலகத்திற்கு மதில் சுவர் அமைக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புவனகிரி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அலுவலகம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் வாடகை இடத்தில் இயங்கியது.பின்னர், பெருமாத்துாரில் தாலுகா அலுவலகம், அதன் அருகில் தாசில்தார் குடியிருப்பும் கட்டப்பட்டது.திறப்பு விழாவிற்குப் பின் அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.அலுவலக வளாகத்தில் மின் மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் அலுவலகம் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்தம் மற்றும் தாசில்தார் குடியிருப்பை சுற்றி மதில் சுவர் அமைக்கவில்லை.

இதனால் பகல் இரவு நேரங்களில் ஆடு, மாடுகள், பன்றிகள் உலா வருவதுடன் அலுவலக வளாகத்தின் பின் பகுதியில் சமூக விரோதிகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர்.இங்கு பணிக்கு வரும் தாசில்தார்கள், அங்குள்ள குடியிருப்பில் தங்குவதில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி, அலுவலகத்தை சுற்றி மதிர்சுவர் அமைக்க வேண்டும். தாசில்தார்கள், குடியிருப்பில் தங்கி பணியாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X