சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

வடலுார் : ரேஷன் பொருட்கள் முழுமையாக கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர்.

ஊரடங்கு காரணத்தால் அரசு சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் பெற வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, பின்னர் அந்தந்த தேதிகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. வடலுார், குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இந்த மாதம் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் டோக்கன் கிடைக்காமல் ரேஷன் பொருட்கள் வாங்கச் சென்றால், அனைத்து பொருட்கலையும் விற்பனையாளர்கள் தருவதில்லை.அரசு, 90 சதவீத பொருட்களை மட்டுமே ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதாக கார்டுதாரர்களிடம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வடலுார், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த பிரச்னை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X