சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பம்ப் சுற்றிலும் போடப்பட்ட மண் குவியல் அகற்றி நடவடிக்கை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை : கடலியில் குடி நீர் கை பம்ப்பை சுற்றிலும் கொட்டியிருந்த மண் அப்புறப்படுத்தப்பட்டும் , பழுதான கைப் பம்ப்பை சீரமைக்காததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

கடலி ஊராட்சியில் குளக்கரை பகுதி அருகே பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக குடிநீர் கை பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் குட்டைப்பகுதியில் துார் வாரிய மண்ணை கைப்பம்ப் அருகில் கொட்டியதால், கை பம்ப் இருக்கும் இடமே தெரியாமலிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த 26ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து கைப்பம்ப் சுற்றிலும் கொட்டப்பட்ட மண் முற்றிலும் அகற்றப்பட்டது. ஆனால், பழுதான கைப்பம்ப் சீரமைக்காததால், இயக்க முடியவில்லை. இப்பகுதியில் கை பம்ப்லை சீரமைத்து மீண்டும் செயல்பட மேல்மலையனுார் பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X