சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்குவிவசாய இயந்திரங்கள் வழங்கல்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பெண்ணாடம் : பெண்ணாடம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கூட்டுப்பண்ணைய திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு விவசாய இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, நல்லுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கி, கொசப்பள்ளம் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 318 ரூபாய் மதிப்பில் 2 பவர் டில்லர் (கைவண்டி), 1 ரோட்டோவேட்டர்; ஏ.அகரம் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு 5 லட்சத்து 20 ஆயிரத்து 944 மதிப்பில் 3 ரோட்டோவேட்டர், 1 பவர் டில்லர் ஆகியவற்றை வழங்கினார்.அப்போது, கொசப்பள்ளம், ஏ.அகரம் உழவர் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள், துணை வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் கவிதா, அறிவழகன், சித்ராங்கி, விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா கூறுகையில், 'கடந்த 2018 முதல் நல்லுார் வட்டாரத்தில் கூட்டுப் பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், 12 கிராமங்களில் 1,200 சிறு குறு விவசாயிகளுக்கு 72 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் டிராக்டர், நெல் நடவு இயந்திரங்கள், பவர் டில்லர், களையெடுக்கும் இயந்திரம், ரோட்டோவேட்டர் உட்பட 46 வகையான இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X