தீவனுாரில் ஒளிரும் மின் விளக்குகள் விழுப்புரம் எஸ்.பி., இயக்கி வைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீவனுாரில் ஒளிரும் மின் விளக்குகள் விழுப்புரம் எஸ்.பி., இயக்கி வைப்பு

Added : ஜூலை 01, 2020
Share

திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில், விபத்துக்களை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் மின் விளக்குகளை, எஸ்.பி., இயக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக அளவில் சாலை விபத்துகள் நடக்கும் இடங்கள் கண்டறிந்து அந்த இடங்களில் இரவு நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள் அமைத்து வருகின்றனர்.அதே போல், திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதுச்சேரி செல்லும் சாலை, செஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் விபத்து நடக்கும் 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஒளிரும் மின் விளக்கு கம்பங்கள் மற்றும் எல்போ வடிவ கம்பங்கள் 4 என 34 இடங்களில் மின் கம்பங்கள் பொறுத்தும் பணி நிறைவு பெற்றது

.இதையொட்டி, விழுப்புரம் - செஞ்சி ரோட்டிலுள்ள தீவனுார் கூட்ரோடு மற்றும் சந்தைமேடு ஆகிய இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள ஒளிரும் மின் விளக்குகளை, விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று முன்தினம் மாலை இயக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், டவுன் டி.எஸ்.பி., கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் காமராஜ், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சரஸ்வதி பங்கஜம் ஹாலில் போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீசார் பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து எஸ்.பி., போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X