ஒரே நாளில், 19 செ.மீ., கொட்டியது மழை| Southwest monsoon: June logs better rain record than previous year | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில், 19 செ.மீ., கொட்டியது மழை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share

சென்னை:தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை துவங்கி, ஒரு மாதமாகி விட்ட நிலையில், முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு, மழை அளவு குறைந்துள்ளது. பருவ மழை அதிகம் பொழியும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், இந்த ஆண்டு, மழை அளவு குறைவாகவே உள்ளது.latest tamil newsஇந்நிலையில், பருவமழை துவங்கிய ஒரு மாத காலத்தில், தமிழகத்தில் முதல்முறையாக, ஒரு நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 24 மணி நேரத்தில், 19 செ.மீ. மழை பெய்துள்ளது.


latest tamil newsசின்கோனா, 14; வால்பாறை, 13; புதுக்கோட்டை, குடவாசல், 9; வைகை அணை, 8; ஆம்பூர், 7; வலங்கைமான், தேவாலா, வேடசந்துார், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.இன்றைய வானிலை நிலவரம்:கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X