சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டாச்சிபுரத்தில் தொற்று பாதித்த16 பேர் குணமடைந்தனர்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் கொரோனா தொற்று பாதித்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட,16 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடுதிரும்பினர்.

கண்டாச்சிபுரத்தில் பால் வியாபாரி கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி இறந்தார். இவரது குடும்பத்தினர் மற்றும் மளிகை வியாபாரியின் குடும்பத்தினர் என 9 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுவந்தனர். கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் முன்னாள் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சிலர் குணமாகி வீடு திரும்பினர்.

நேற்று சப் இன்ஸ்பெக்டர் , 4 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர். கண்டாச்சிபுரத்தில் தொற்று ஏற்பட்ட 22 பேரில் 16 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். பால்வியாபாரி இறந்ததைத் தொடர்ந்து கண்டாச்சிபுரத்திற்கு, சுற்றியுள்ள கிராம மக்கள் வருவதும் குறைந்தது.மேலும் வியாபாரிகளும் தன்னிச்சையாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடைகளை அடைத்திருந்தனர்.இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

தற்போது பலர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில் மேலும் நோய் பரவாமல் இருக்க, அத்தியாவசிப் பொருட்களுக்கான கடைகளைத் தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது என பொதுமக்கள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X