சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி பின்பற்றாத5 கடைகளுக்கு நகராட்சி 'சீல்'

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சமூக இடைவெளி பின்பற்றாத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடைகள், வங்கிகள் உட்பட பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடை பிடிப்பதுடன், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை பின்பற்றாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என கலெக்டர் கிரண் குராலா எச்சரித்திருந்தார்.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகளின் முன் கிருமி நாசினி, தண்ணீர், சோப்பு ஆகியவற்றை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பஸ் நிலையத்தில் உள்ள மளிகைக் கடை, கச்சேரி சாலையில் எலக்ட்ரிக் கடை, மளிகைக் கடை, துருகம் சாலையில் மொபைல் கடை உட்பட 5 கடைகளுக்கும் கலெக்டர் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X