மணல் கடத்தியவர் கைது இரு மாட்டுவண்டிகள் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் கைது இரு மாட்டுவண்டிகள் பறிமுதல்

Added : ஜூலை 01, 2020
Share

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்திலிங்கமடம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது, அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.அங்கு போலீசாரை பார்த்ததும் மணல் கடத்தி சென்ற இருவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.அப்போது போலீசார் துரத்தி சென்று டி.குன்னத்துாரை சேர்ந்த கலியன் மகன் முருகன், 33; என்பவரை கைது செய்தனர்.மேலும் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X