மின்வேலியில் சிக்கி விவசாயி சாவுஎஸ்.பி., அலுவலகத்தில் பெண் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி விவசாயி சாவுஎஸ்.பி., அலுவலகத்தில் பெண் புகார்

Added : ஜூலை 01, 2020
Share

விழுப்புரம் : மின்வேலியில் சிக்கி கணவர் இறந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாலமுருகன் மனைவி விமலா கொடுத்துள்ள மனு;என் கணவருக்கும், பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக, அவர்கள் என் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவந்தனர். இந்நிலையில் பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்கள், என் கணவன் பாலமுகனை சாகடிப்பதற்காக நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தனர். அதில், சிக்கி நேற்று முன்தினம் எனது கணவர் இறந்துவிட்டார். எனவே, என் கணவர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X