சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு குண்டாஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 'குண்டாஸ்'

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
கடலுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த தீர்த்தாம்பாளையம், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் ராமன், 45; இவர், கடந்த மாதம் 7 ம் தேதி மன நலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து

கடலுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த தீர்த்தாம்பாளையம், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் ராமன், 45; இவர், கடந்த மாதம் 7 ம் தேதி மன நலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்குப் பதிந்து, ராமனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவரின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், ராமனை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை சிறையில் உள்ள ராமனிடம் போலீசார் வழங்கி கையெழுத்து பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X