திருக்கோவிலுார் : வீட்டு மனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் மகன் நேரு, 29; அதே பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் ஆறுமுகம். இருவரது குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 28ம் தேதி மாலை நேருவின் அண்ணன் ஏழுமலை, அண்ணி செல்வி ஆகியோருடன் ஆறுமுகம் அவரது உறவினர்கள் தேவேந்திரன், வேல்முருகன், லட்சுமணன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சென்ற நேரு சமாதானம் செய்ய முயன்றபோது, தாக்கப்பட்டார்.
காயமடைந்த நேரு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார், ஆறுமுகம் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement