இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

Added : ஜூலை 01, 2020
Share

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே பைக் மோதி சாலையோரம் நின்றிருந்த முதியவர் இறந்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியம், 75; இவர், நேற்று காலை கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த குணசேகரன், 49; என்பவர் ஓட்டி வந்த பைக், அவர் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த பாக்கியம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X