இந்தியா

மருந்து தயாரிப்பு கம்பெனியில் விபத்து

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

வில்லியனுார் : வில்லியனுார் அருகே மாத்திரை தயாரிக்கும் கம்பெனியில் ட்ரையர் மிஷின் வெடித்து தீ பிடித்ததில் 8 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் மேக்சர் பார்மா இந்தியா பிரைவேல் லிமிடெட் என்ற தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. மாத்திரை தயாரிக்கப்படும் இந்த கம்பெனியில் 100 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா விதிமுறையால் 70 பேர் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.நேற்று மாலை 4:00 மணிக்கு ஒருசிலரை தவிர மற்ற தொழிலாளர்கள் டீ குடிக்க வெளியே வந்தனர். இந்நிலையில் மாலை 4:20 மணிக்கு கம்பெனியில் இருந்து திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது.

டீ சாப்பிட வந்த தொழிலாளர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, மாத்திரை உலர வைக்கும் ட்ரையர் மிஷின் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.மேலும், அங்கு பணியில் இருந்த பெரியபேட் ராமலட்சுமி, கே.வி., நகர் சாந்தி, காமாட்சி, மேட்டுப்பாளைம் மேரி, உத்திரவாகினிபேட்டை சத்யா, ஆதிலட்சுமி, ராஜலட்சுமி மற்றும் மல்லிகா ஆகிய 8 பேர் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில், ஆபத்தான நிலையில் இருந்த சாந்தி, ராமலட்சுமி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து பற்றி தகவலறிந்த வில்லியனுார் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேற்கு பகுதி எஸ்.பி., ரங்கநாதன், வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X