இந்தியா

கருத்து கேட்பு கூட்டங்களுக்கு அழைப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : தேச நலனில் அக்கறை கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தை துறை ரீதியான நடவடிக்கைக்கு அழைத்து பேச வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய ஆசிரியர் சங்க புதுச்சேரி மாநில தலைவர் பாட்சா விடுத்துள்ள அறிக்கை: பதிவு செய்யப்பட்ட எங்கள் சங்கம், தேசிய அளவில் அகில பாரதிய ராஷ்டிரிய ைஷஷிக் மகாசங் (ஏ.பி.ஆர்.எஸ்.எம்.,) சங்கத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது. இது குறித்து கவர்னர், தலைமை செயலர், பள்ளி கல்வி செயலர், இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட் டுள்ளது.புதிய கல்வி கொள்கை யில் உள்ள நல்ல விஷயங்களை மாணவர்கள், பெற்றோர்களுக்கு கருத்தரங்கம் மூலம் தெரியப்படுத்தப் பட்டுள்ளது.

இதேபோல் ஜூம்செயல் வழி மூலம் இரண்டு முறை நடத்திய இன்றைய கல்வி சூழல் குறித்து தெரியப்படுத்தி உள்ளோம். இந்த பரிந்துரைகள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.இது போன்ற சூழ்நிலையில் கடந்த 22ம் தேதி கல்வித் துறையில் நடந்த மூன்று நாள் சம்பளம் பிடிப்பதற்காக நடந்த அனைத்து சங்கங்கள் கூட்டத்திற்கு எங்களை அழைக்கவில்லை.அரசுக்கு கொரோனா நிதியை ஒருநாள் சம்பளமாக வழங்க ஏ.பி.ஆர்.எஸ்.எம்., வழிகாட்டுதலின்படி நாங்களே முன் வந்து ஆதரவு தெரிவித்துள்ளோம்.

அப்படி இருக்கும்போது கல்வித் துறையில் நடந்த அனைத்து சங்க கூட்டத்திற்கு அழைக்காதது திட்டமிட்டு புறக்கணித்தாக கருதுகிறோம்.இனி வரும் காலங்களில் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களையும் அழைத்து பேச வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X