தீயணைப்பு வீரருக்கு கொரோனா அனைவருக்கும் பரிசோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வீரருக்கு கொரோனா அனைவருக்கும் பரிசோதனை

Added : ஜூலை 01, 2020
Share

தியாகதுருகம் : தியாகதுருகம் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மற்ற வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் 50 வயதுடைய தீயணைப்பு வீரர். இவர், ஊரடங்கு அமல் செய்யப்பட்ட நாள் முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.உடனடியாக அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து, தியாகதுருகம் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மேலும், இங்கு பணிபுரியும் நிலைய அலுவலர் சீனிவாசன் உட்பட 13 தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X