இந்தியா

யானையை அனுப்பாவிட்டால் போராட்டம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகத்திடம் யானை லட்சுமியை ஒப்படைக்காவிட்டால், பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, முதல்வரின் பார்லிமெண்ட் செயலர் லட்சுமிநாராயணன் எச்சரித்துள்ளார்.

வனத் துறையின் முதன்மை வனக் காப்பாளருக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, வேளாண் அறிவியல் நிலையத்தில் வனத் துறையின் பாதுகாப்பில் உள்ளது. 14 நாட்களுக்கு மேலாகியும் கோவிலுக்கு யானை லட்சுமி திரும்பாதது பக்தர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், முகாமில் யானைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்தாக தெரியவில்லை. இரவு நேரங்களில் நச்சு பூச்சிகள், பாம்பு மற்றும் விலங்குகளை பார்த்தால் யானை பயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.தனிமையில் பல நாட்கள் இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி யானையின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

யானைக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என பல புகார்கள் எழுந்துள்ளது. எனவே, யானைக்கு ஆபத்து ஏதும் வருவதற்கு முன், அதன் இருப்பிடத்திற்கே மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை தகர்ப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. வனத்துறை எந்தவித முகாந்திரம் இல்லாமல் யானை லட்சுமியை கோவில் நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்து எடுத்துக் கொள்வது மத நம்பிக்கையில் தலையிடுவதாகும். கோவிலுக்கு யானை திரும்பாவிட்டால், பக்தர்களை திரட்டி வனத்துறை எதிரில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X