முட்டை வியாபாரியைதாக்கிய இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முட்டை வியாபாரியைதாக்கிய இருவர் கைது

Added : ஜூலை 01, 2020
Share

விழுப்புரம் : முட்டை வியாபாரியை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம், 43; கோலியனுாரில் முட்டை கடை வைத்துள்ளார்.இவரது கடையில், கோலியனுாரை சேர்ந்த மாரிமுத்து மனைவி மகேஸ்வரி, 30; என்பவர் கடந்த 29ம் தேதி முட்டை வாங்கியுள்ளார். அப்போது சதாசிவம், தவறாக பேசியதாக, மாரிமுத்துவிடம், மகேஸ்வரி கூறினார். இதனால், ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து, 35; அவரது உறவினர் அய்யனார், 22; ஆகியோர் சேர்ந்துசதாசிவத்தை திட்டி தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்து, அய்யனாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X