பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூனில் தான் கோரதாண்டவம்: பாதிப்பு 68,000; பலி 1,028

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனாவால் 67 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டு 1028 பேர் இறந்துள்ளனர்.



latest tamil news


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரால் மார்ச் 7 ம் தேதி கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் கொரோனா படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. இதற்கிடையில் டில்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்றவர்களால் மாநிலம் முழுதும் தொற்று அதிகரிக்க துவங்கியது. வைரஸ் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை சி.எம்.டி.ஏ. ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படாததால், கோயம்பேடு தொற்று மாநிலம் முழுவதும் பரவியது. அதுவரை ஆயிரத்துக்குள் இருந்த பாதிப்பு 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க துவங்கியது.


latest tamil news


இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 7 முதல் நேற்று வரை 90 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜூன் மாதத்தில் மட்டும் 67 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 1201 பேர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில் 1028 பேர் ஜூனில் இறந்துள்ளனர்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் அதிகளவு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், மதுரை, வேலுார், திருவண்ணாமலை என 15 மாவட்டங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது 4000 என்ற எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படுவதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சுகாதாரத் துறைக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
01-ஜூலை-202007:32:14 IST Report Abuse
siriyaar தமிழன் உலகிலேயே ஒழுக்கமானவன் திறமையானவர் உதாரணம் அவன் கட்டிய கோயில்கள். அவன் இயலாமை சாராயம் மற்றும் கூத்தாடிகளிடத்தில் அடிமைத்தனம் . சாராயக்கடை திறக்கும் வரை தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக அவ்வளவு டப்ளிக் வந்தும் நின்றது, ஏன் சுடலை கூட யாரையும் கெடுக்க முடியலை. கடை திறந்து மே 16 முதல் தமிழன் கூட ஆரம்பித்தான் சுடலை பேச்சு எடுபடத்துவங்கியது, தமிழ்நாடு இன்று சுடுகாடாக மாறுகிறது, எல்லாம் நன்றாய் செய்த எடப்பாடி தான் ஆட்சிக்கு சாவுக்குழி தோண்டிவிட்டார்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202005:17:30 IST Report Abuse
தல புராணம் மாற்றாத அந்த மஞ்சள் கிளவுசின் மூலமே குறைந்ததது 5,000 பேருக்கு பரவியிருக்கும்.
Rate this:
01-ஜூலை-202005:39:10 IST Report Abuse
இவன் புராணம், அத மாத்தல னு நீ பாத்தியா? நல்ல வீட்ல உட்காந்து tv பாத்துகிட்டு வ்யாகனம் பேசுவீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X