இந்தியா

கடைகள் இரவு 8 மணி வரை இயங்கலாம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் கடைகள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் இரவு 8 மணி வரை இயங்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா ஊரடங்கில் இன்று (1 ம்தேதி) முதல் மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லுாரி. கோச்சிங் சென்டர் வரும் 31ம் தேதிவரை திறக்கப்பட மாட்டாது. சினிமா தியேட்டர், ஜிம், ஓட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட்டு இருக்கும். விமான சேவை படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது. அரசியல் கட்சிகள் போராட்டம், ஊர்வலங்களை தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை ஜூலை 31ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.புதுச்சேரியில் கடைகள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் தற்போது மதியம் 2 மணி வரை திறந்து இருக்கின்றன. இனி இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம். கடை உரிமையாளர்கள் இரவு 9 மணிக்குள் வியாபாரத்தை முடித்து கொண்டு வீடுகளுக்கு திரும்பிவிட வேண்டும். இரவு 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும்.

யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுகள் அனைத் தும் வரும் 3ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.கடைகள், நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்க வேண்டும். தவறினால், அபராதம் விதிக்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர்.கடந்த நான்கு மாதங்களில் புதுச்சேரி மாநில வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமருக்கு 17 கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் பதில் எதுவும் தரவில்லை. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X