சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலி பேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

விழுப்புரம் : மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் மதிவாணன் மனைவி வீரவள்ளி, 26; இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியும், குழந்தைஇல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாட்டால், வீரவள்ளி திருமணமான ஆறு மாதத்தில் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.கடந்த எட்டு மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த வீரவள்ளி, காட்ராம்பாக்கத்தில் உள்ள தனது அக்கா அஞ்சலாட்சி, 33; என்பவர் வீட்டில் கடந்த 26ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X