பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளில் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை : 'சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும். பிற பகுதிகளில் வழக்கம் போல வங்கிகள் இயங்கும்.

ஊழியர்கள் மாற்று முறையில் பணிக்கு வரலாம். பெட்ரோல் நிலையங்கள் காஸ் ஏஜென்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் டீலர்களிடம் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது. இருந்தாலும் 6ம் தேதி முதல் 31ம் தேதிவரை 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல மாலை 4:00 மணி வரை வங்கிகள் செயல்படும்.


latest tamil news


அனைத்து நிர்வாக அலுவலகங்கள் காசோலை பரிவர்த்தனை பிரிவுகள் போன்றவை 33 சதவீத ஊழியர்களுடன் 4ம் தேதி வரை செயல்படும். அதன்பின் 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல் செயல்படலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஊழியர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. இருந்தாலும் உரிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-ஜூலை-202010:16:27 IST Report Abuse
அசோக்ராஜ் பேங்க் ஸ்டாஃபைக் கண்டாலே பத்திக்கிட்டு வருது. ஏன்னா பத்து அட்டெம்ப்டு அடிச்சும் எனக்கு பேங்க் வேலை கிடைக்கல்லே. வயசு தாண்டிடுச்சு.
Rate this:
Nallavan - Dehradun,இந்தியா
01-ஜூலை-202012:33:14 IST Report Abuse
NallavanBoss. சரியாய் முயற்சி pannanum. முதல் அட்டெம்ப்ட்ல பல்லாயிரம் பேர் பாஸ் panranga....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
01-ஜூலை-202014:25:11 IST Report Abuse
தல புராணம்மிஸ்ட் கால் கட்சியில் சேர்ந்து லோன் ஆபீசர் ஆயிடலாமே.....
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜூலை-202009:53:02 IST Report Abuse
மலரின் மகள் ஊழியர்கள் வெறும் மாஸ்க் மட்டும் அணிந்தால் போதுமா? ஒவ்வொரு ஊழியருக்கு இடையில் ஒரு மீட்டர் இடைவெளி வேண்டாமா? அல்லது நாடு இருக்கையை காலியாக வைக்க சொல்லமாட்டார்களா? நல்ல வேலை இந்த வங்கி சாத்தான்குளத்து போலீஸ் காரர்கள் கண்ணில் வெள்ளி அன்று கண்ணில் படவில்லை.
Rate this:
Cancel
01-ஜூலை-202009:44:30 IST Report Abuse
தமிழ் ஆமா இல்லைனாமட்டும் இவனுங்க சேவை செஞ்சிட்டுதான் மறுவேலை. இவனுங்க சேவைதான் ஊரறிஞ்சதாச்சே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X