இந்தியா

ரவுடி கொலை வழக்கில் நண்பர் உட்பட மூவர் சிக்கினர்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பர்கள் மூவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கோவிந்தசாலை, சுப்ரமணி சிவா வீதியைச் சேர்ந்தவர் அமுல் (எ) அமுல்தாஸ்,38; ரவுடியான இவர் நேற்று முன்தினம் காலை, முதலியார்பேட்டை உடையார் தோட்டத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் சாலையில், கழுத்து அறுக்கப்பட்டு, தலையில் கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ரவுடி அமுலை, யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில், அமல்தாசுடன் கடைசியாக சென்ற, உடையார்தோட்டத்தை சேர்ந்த திலிப், பிரான்சுவாதோட்டம் விஜி, ஜான் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.மூவரும் ரவுடி அமுலுடன் சேர்ந்து உடையார்தோட்டம் திலிப் வீட்டில் மதுபானம் குடித்ததும், பின்பு அங்கேயே ரவுடி அமுல்தாசை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, உடலை துறைமுகம் சாலையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.அதனையொட்டி மூவரையும், கொரோனா பரிசோதனைக்காக, கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை முடிவுக்கு பின்பு, எதற்காக கொலை நடந்தது.இதில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X