சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவை! கூடுதல் வென்டிலேட்டர், படுக்கை வசதி...மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வென்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக, மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு முதலில் தயாரானது.தொடர்ந்து மூன்றாம் கட்ட பரவலை எதிர்கொள்வதற்காக அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டடம், தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டது. இங்கு 16 அறைகளில் 100 படுக்கைகள் மற்றும் 10 வென்டிலேட்டர்கள் தயார் செய்யப்பட்டது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாருக்கேனும் கொரோனா உறுதி செய்யப்பட்டால், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்தது.இதனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை, மாவட்டத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் தனியார் பொறியியல் கல்லுாரி, தச்சூர் தனியார் மகளிர் கல்லுாரி, குமாரமங்கலம் மாதிரி பள்ளி ஆகிய 3 இடங்களும், சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்களைக் கண்காணிக்க சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, மேலேரி தனியார் கல்லுாரி ஆகிய 2 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாற்றப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா உறுதியான நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறுவங்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை கூடுதல் தனிமைப் படுத்தப்பட்ட மையமாக மாற்றும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது.

இங்கு, நுழைவுப்பகுதியில் மருத்துவர் அறைகள், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தமாக 15 அறைகளும் தனிமைப்படுத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளை தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு 'ஸ்ட்ரெச்சரில்' கொண்டு செல்ல இரும்பிலான சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய அறையில் 10 படுக்கைகளும், பெரிய அறையில் 15 படுக்கைகளும், கூடுதல் கழிவறைகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்து உள்ளன. மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட எலக்ட்ரீஷியன் பணி முடிந்ததும், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.வென்டிலேட்டர் தேவைமாவட்டத்தில் கொரோனா உறுதியானவர் களில் மோசமான நிலையில் இருப்பவர்களை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அல்லது சென்னை ராஜிவ்காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

இதுவரை கொரோனா பாதித்து இறந்த 3 பேரும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையிலில் 10 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. படுக்கை வசதிகளும் குறைவாகவே உள்ளன. எனவே, மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக வென்டிலேட்டர்களையும், படுக்கை வசதிகளையும் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X