இந்தியா

கொதிக்கும் எண்ணெயை சிறுமி மீது ஊற்றியவர் கைது

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பாகூர் : ஒருதலை காதல் விவகாரத்தில் சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி, தனது தாயுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, மர்ம நபர் ஜன்னல் வழியே சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். படுகாயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சுப்ராயன் மகன் மாதேஷ்,19; ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், மாதேஷை கண்டித்துள்ளனர்.அதில் ஆத்திரமடைந்த அவர், கடந்த 28ம் தேதி சிறுமியின் வீட்டின் அருகே தீ மூட்டி ஒரு பாத்திரத்தில் எண்ணெயை கொதிக்க வைத்து, அதனை சிறுமி மீது ஊற்றிவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.அதன்பேரில், தலைமறைவாக இருந்த மாதேஷை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X