சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் கொரோனா குறித்த விளம்பர பலகை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் கொரோனா குறித்த விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

சங்கராபுரம் பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் தொற்றைத் தடுக்க மக்களிடையே பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் போலீஸ் நிலைய வாயிலில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பலகை வைத்துள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் நோய் தொற்றை தவிர்ப்பதற்காக அவசர வழக்குகள் மட்டுமே காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படும். அந்த அவசர வழக்குகளுக்கான மனுவினை மனுதாரர் மற்றும் அவருடன் உதவியாக ஒரு நபர் மட்டும் காவல் நிலையத்தின் உள்ளே வரலாம்.

காவல் நிலைய நுழைவு வாயிலில் வைத்திருக்கும் தண்ணீரில் மனுதாரர் மற்றும் அவருடன் வருபவர் சோப்பு போட்டு கைகளைக் கழுவிக்கொண்டு, சானிடைசர் தடவி கைகளை சுத்தம் செய்து இன், அவுட் பதிவேட்டில் கையொப்பமிட்ட பின்னர் காவல் நிலையத்தின் உள்ளே வரவேண்டும்.முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே காவல் நிலையத்தின் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படும். துண்டு அல்லது கர்சீப் கட்டியிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சிவில் சம்மந்தப்பட்ட பாகப்பிரிவினை, வீட்டுமனை, நில அளவை பிரச்னைகளுக்கு மனு மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்.

கொரோனா தொற்று குறைந்து, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பட்சத்தில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்து பிரச்னையைத் தகுந்த முறையில் தீர்வு காண அறிவுரை வழங்கப்படும். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை விசாரிக்கப்பட மாட்டாது. கணவன், மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு, பிரிந்து வாழுதல், நகை கொடுக்கல், வாங்கல் பிரச்னைக்கு திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகவும்.காவல் நிலையத்தின் முன்பு தேவையில்லாமல் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அவசர வழங்குகளில் மனு விசாரணை செய்ய தாமதம் ஏற்பட்டால் காவல் ஆய்வாளர் 99981 54366, உதவி ஆய்வாளர் 94449 33348, காவல் நிலையம் 94981 00517 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என விளம்பர பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X