இந்தியா

தேக்கம்! வருவாய்துறையில் பணிகள்...காலி பணியிடங்கள் அதிகரிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
தேக்கம்! வருவாய்துறையில் பணிகள்...காலி பணியிடங்கள் அதிகரிப்பு

புதுச்சேரி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுவது வருவாய் துறை. இத்துறையில் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் என ஐந்து முக்கிய பதவிகளில் 394 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் தற்போது 285 பேர் தான் பணியில் உள்ளனர்.109 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் வருவாய் துறையின் பல்வேறு பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துறையில் மொத்தமுள்ள 53 தாசில்தார் பணியிடங்களில், தற்போது 24 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.தாசில்தார் பணியிடம் 100 சதவீதம் துணை தாசில்தார்கள் கொண்டு பதவி உயர்வு மூலமே நிரப்ப வேண்டும். ஆனால் தகுதியான துணை தாசில்தார்கள் இருந்தும் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.

நியமன விதிகளின்படி ஐந்து ஆண்டுகள் பணி முடித்த துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் பத்தாண்டுகள் அனுபவம் இருந்தும் துணை தாசில்தார்களுக்கு இதுநாள் வரைபதவி உயர்வு எட்டா கனியாகவே உள்ளது.இதேபோல் 12 துணை தாசில்தார், 15 கிராம நிர்வாக அலுவலர், 71 கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அதே வேளையில் 51 வருவாய் ஆய்வாளர் பணியிடத்தில் தற்போது 69 பேர் பணியில் உள்ளனர். 18 வருவாய் ஆய்வாளர்கள் முந்தைய காலங்களில் அளவுக்கு அதிகமாக நிரப்பப்பட்டுள்ளது.

அத்துடன் தாசில்தார் பணியிடங்களில் அமர்த்தப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர்களுக்கு தாசில்தார் காலி இடங்களுக்கான ஊதிய தொகுப்பில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதனாலும் தாசில்தார் பதவி உயர்வுக்காக 29 காலியிடங்கள் இருந்தும், துணை தாசில்தார்களை கொண்டு நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுவே வருவாய் துறையில்பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணாததால், ஒட்டுமொத்த பதவி உயர்விலும் எதிரொலித்து வருகிறது.

துணை தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்ற பிறகே அடுத்தடுத்த நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர்கள் பதவி உயர்வு பெற முடியும்என்பதால் ஒட்டுமொத்த வருவாய் துறையும் பதவி உயர்வு இல்லாமல் ஸ்தம்பித்துள்ளது. பணிச்சுமை பிறர் மீது திணிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிராம நிர்வாக அலுவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டு வருவதால், பணிகள் தேக்கமடைந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, அரசின் பிரதான துறையான வருவாய் துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் விரைந்து நிரப்பிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X