மாங்கனி திருவிழா இன்று துவக்கம் | Dinamalar

இந்தியா

மாங்கனி திருவிழா இன்று துவக்கம்

Added : ஜூலை 01, 2020
Share

காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா இன்று துவங்குகிறது.

காரைக்கால் பாரதியார் சாலையில் அமைந்துள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா இன்று மாப்பிள்ளை அழைப்புடன் துவங்குகிறது. நாளை 2ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் புனிதவதியார், பரமதத்தர் திருக்கல்யாணம் நடக்கிறது. 3ம் தேதி ஸ்ரீபிசாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.வரும் 4ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீபிட்சாட்ணமூர்த்தி புறப்படுதலும், அப்போது மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று மதியம் காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் ஈசனுக்கு அமுது படைத்தலும், இரவு 8 மணிக்கு பரமதத்த செட்டியார் இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது.விழாவை பக்தர்கள்,www.karaikaltemples.com என்ற இணையதள முகவரியில் வீட்டில் இருந்தே காணலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X