இந்தியா

நோய் பரவலை தடுக்க ஒத்துழையுங்கள்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

புதுச்சேரி : முக கவசம், சமூக விலகளை பின்பற்றவில்லை என்றால், நம் உறவினர்களை பிரியும் சூழ்நிலை ஏற்படும், நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள பதிவு:மக்கள் முககவசங்களை அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும். கோவிட் பரவலை தடுக்க சட்டரீதியாக அழுத்தம் தந்து பராமரிக்க வேண்டும். ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்த வேண்டும். ஆரோக்ய சேது செயலியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அனைவரும் முன்னுரிமை கொடுத்திட வேண்டும்.

மக்கள் கூடுவதையும், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதையும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்.தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் மீதான வழக்கு, விசாரணையில் எந்த தளர்வும் அளிக்கக் கூடாது. நீங்கள் வழக்கு தொடுப்பதன் மூலமாகத் தான் சட்டத்தின் மீதான மரியாதை இருக்கும். மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும்.இதனால், நமது சுகாதார அமைப்பு, மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் மீது விழும் அழுத்தத்தைக் குறைக்கும்.

தயவு செய்து நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்கவும். முககவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது, தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீதான வழக்குகள், ஆரோக்ய சேது செயலி போன்ற அனைத்தும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்து வதற்கான வழிமுறை. இதை பின்பற்றவில்லை எனில் நமது குடும்பத்தினர்கள், நண்பர்கள் என யாரேனும் ஒருவரை நாம் பிரியக் கூடிய இக்கட்டான நிலை ஏற்படும். தமிழ்நாடு இன்னும் ஏன் பொதுமுடக்கத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் அண்டை மாநிலங்களைப் போல் அதிக மக்கள் தொகையைப் பெற்றிருக்கவில்லை. எனவே, நோய்த் தடுப்புக்கு நம் மக்களை தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X