ஊரடங்கால் குறைந்த குற்ற வழக்குகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் குறைந்த குற்ற வழக்குகள்

Added : ஜூலை 01, 2020
Share

கள்ளக்குறிச்சி : ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களாக குற்ற வழக்குகள் 80 சதவீதம் குறைந்தன.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தடை உத்தரவால் தனியார் நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். மேலும் வெளிமாவட்ட, மாநிலங்களில் தங்கி பணி புரிந்த பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.பொதுவாக பாகம் பிரிப்பதில் தகராறு, இரவில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, விபத்து, தற்கொலை உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நாள்தோறும் ஏராளமான வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதியப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக இது போன்ற குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக மக்கள் வீட்டிலேயே இருப்பதால் திருட்டு சம்பவங்களும், அடிதடி தகராறும் 80 சதவீதம் குறைந்துள்ளது. இது தவிர மணல் திருட்டு, உண்டியல் உடைப்பு, விபத்து ஆகிய வழக்குகள் குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் குறைந்ததால் போலீசார் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X