விபத்தில் சிக்கியவருக்கு தொற்று உதவியவர்களும், போலீசாரும் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கியவருக்கு தொற்று உதவியவர்களும், போலீசாரும் அச்சம்

Added : ஜூலை 01, 2020
Share

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் விபத்தில் சிக்கிய வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருக்கு உதவியவர்களும், போலீசாரும் அச்சத்தில் உள்ளனர்.

கடலுார் மாவட்டம் ,நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியைச் சேர்ந்த 28 வயது வாலிபர், இரு தினங்களுக்கு முன், வாழப்பட்டு பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது, எதிரே வந்த வாகனம் மீது மோதி, காயமடைந்தார்.அப்பகுதியைச் சேர்ந்த சிலரும், போலீசாரும், வாலிபரை ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு கொரோனா தொற்று சோதனை செய்தனர். அதில் அவருக்கு தொற்று உறுதியானது.இதனால், விபத்தின் போது உதவியவர்களும், போலீசாரும் அச்சத்தில் உள்ளனர்.

விபத்து ஏற்படும் முன் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா அல்லது மருத்துவமனைக்கு சென்ற பிறகு வந்ததா என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். முதல்கட்டமாக அவரது குடும்பத்தில் உள்ள நால்வருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விபத்தின் போது அவருடன் இருந்தவர்களுக்கு சந்தேகம் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X