லஞ்சம் வாங்கிய வழக்கில் மாஜி அலுவலருக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாஜி அலுவலருக்கு சிறை

Added : ஜூலை 01, 2020
Share

விழுப்புரம் : பட்டா மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி நில அளவையருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா நெடுமானுாரை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ராணி, 60; இவர், தனது இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, கடந்த 2016ம் ஆண்டு விண்ணப்பித்தார். அதற்கு, ஆலத்துார் குறுவட்ட நில அளவையரான பிச்சமுத்து, 59; என்பவர், 3,௦௦௦ ரூபாய் லஞ்சம் வாங்கினார்.அப்போது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பிச்சமுத்துவை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றம்சாட்டப்பட்ட பிச்சமுத்துவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.இதையடுத்து, பிச்சமுத்து கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணையின்போது, பிச்சமுத்து பணி ஓய்வு பெற்றது குறிப்பிடத் தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X