சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சப்- கலெக்டருக்கு தொற்று

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நேற்று 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 850 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 764 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில் 228 பேருக்கு பரிசோதனை செய்ததில், 88 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.இவர்களில் 2 பேர் சென்னை மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதால், மீதமுள்ள 86 பேரை மட்டும் சேர்த்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளது. இதில் 364 பேர் குணமடைந்துள்ளனர்.

இருவர் இறந்தனர்.மருத்துவ சிகிச்சையில் உள்ள 484 பேரில் 117 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி உள்ளது. 367 பேருக்கு அறிகுறி இல்லை.நேற்று தொற்று உறுதியானவர்களில் 22 பேர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ., - சப் கலெக்டருக்கு தொற்றுகள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதாவின் உமிழ் நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி, அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.இதையொட்டி மூங்கில் துறைப்பட்டு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனராக பணிபுரியும் மாலதி, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் உமிழ்நீர் கடந்த 29ம் தேதி பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப் படுத்தப்பட்டார்.இதனால், சப் கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., அலுவலகங்களில் பணிபுரியும் டிரைவர்கள், அலுவலர்களின் உமிழ்நீர் மாதிரியும் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X