சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு தொற்று

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 47 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 915 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 14 பேர் இறந்தனர்.கொரோனா தொடர்பாக 401 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். இந்நிலையில், நேற்று 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 915 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக 543 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோயில் இருந்து குணமடைந்த 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதாரத்துறை சிறப்பு மையங்களில் 207 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் எஸ்.ஆர்.எஸ்., நகரில் கொரோனாவால் நேற்று முன்தினம் இறந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின், இறப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இறப்பு எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X