திடீர் தீ விபத்து ரூ.15 ஆயிரம் சேதம்| Dinamalar

இந்தியா

திடீர் தீ விபத்து ரூ.15 ஆயிரம் சேதம்

Added : ஜூலை 01, 2020
Share

காரைக்கால் : வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.நெடுங்காடு, திருவெங்கடபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் உமாநாத்,40; கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் பருத்தி வயல் வேலைக்கு சென்று உள்ளனர்.அப்போது வீட்டின் பின்பக்கம் சமையல் கூடம் திடீரென தீ பிடித்து எரிந்தது. நெடுங்காடு சுரக்குடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X