சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் நேற்று 29 பேருக்கு தொற்று

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 1,040 பேர் கொரோனா தொற்றால் பாதித்ததாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், நேற்று 29 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டம் முழுவதும் நேற்று வரை 645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட 417 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 24,234 பேருக்கு பரிசோதனை செய்ததில், 1,069 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளது. 21,8,61 பேருக்கு தொற்று இல்லை. 1,304 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளி பகுதிகளில் இருந்து வந்தவர்கள் 220 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டு துவங்கியதால், பிற சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

விருத்தாசலம் நகரை சேர்ந்த 50 வயது ஆண், காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார். மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X